இறந்தவரெல்லாம்
உன்னிடமெனில்
உன்னிடமிருந்து
யார் வந்து சொன்னது
நீ இருக்கிறாய் என்று
-
ஆழி நீ எனில்
பூமி நீ எனில்
காற்று நீ எனில்
நெருப்பு நீ எனில்
வானம் நீ எனில்
ஏற்றுக்கொள்கிறேன்
உன் சீற்றங்களை
-
ஆக்கும், அழிக்கும்
உரிமைகள் உனதெனில்
நீ ஆக்கிய உயிர்கள்
அழிக்கும் உரிமையை
பெற்றதேன்.
-
காப்பது நீயெனில்
காவலர்கள் ஏன் இங்கு
-
நீ இல்லை
என்று சீறும் நான்
உன்னை
நீ காட்டிக்கொள்ள
நேரம் தருகிறேன்
முடிந்தால்
முன் நில்லும்

இந்த முழு கவிதையும் ஆன்மிகத்தை வியாபாரம் ஆக்கிய கைவர்களுகும் மற்றும் மூடநம்பிக்கை உடையவருக்கும் மட்டுமே பொருந்தும் இயற்கையை நம்பியோருக்கு இல்லை
பதிலளிநீக்குநண்பர் ஓம்ப்ரகாஷ்
நீக்குகடவுள் இல்லவே இல்லை என்று நான் சொல்லவில்லை.
பஞ்ச பூதங்கள் நம்மை மீறிய சக்திகள் கொண்டவை ஆகவே அவைகளை கடவுளாக ஏற்றுக்கொள்வதில் எனக்கு வருத்தமோ பிசகோ இல்லை...
கடவுள் இருப்பதாக சொல்லும் அந்த ஆன்மிக வாதிகளின் கடவுளுக்கே இதை நான் எழுதி இருக்கிறேன்... உதாரணத்திற்கு கீதையை எழுதியதாக சொல்லப்படும் கிருஷ்ணனுக்கு....