மயக்கச்
சொல்கிறது மல்லிகை
சிவக்கச்
சொல்கிறது வெற்றிலை
விரும்பச்
சொல்கிறது காதல்
வெறுக்கச் சொல்கிறது
ஊடல்
நெளியச்
சொல்கிறது நதி
ஒளியச்
சொல்கிறது நிலா
வளையச்
சொல்கிறது வில்
அலையச்
சொல்கிறது காற்று
மாறச் சொல்கிறது மாற்றம்
தேறச் சொல்கிறது வீழ்ச்சி
மறக்கச்
சொல்கிறது மனம்
மரிக்கச்
சொல்கிறது மானம்
பிழைக்கச்
சொல்கிறது வாய்ப்பு
இழக்கச்
சொல்கிறது பயம்
சுடச் சொல்கிறது நெருப்பு
விடச் சொல்கிறது வெறுப்பு
ஓடச் சொல்கிறது நேரம்
கூடச் சொல்கிறது மேகம்
தேடச் சொல்கிறது கண்
மூடச் சொல்கிறது மண்
விழச் சொல்கிறது மழை
எழச் சொல்கிறது விதை
கற்றோம்,
கற்கிறோம், கற்போம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக